ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் யாழ்ப்பாணத்தில்

52 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இலங்கையில் 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களுக்கு அங்கு சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply