பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரசா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

67 வயதான யூசுஃப் ரசா கிலானி ஊழல் வழக்கு விசாரணைக்காக சென்றுவந்த பிறகு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் காசிம் கிலானி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இம்ரான் கான் அரசுக்கு நன்றி. உங்களால் என் தந்தையின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரும், முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான ஷெஹ்பான் ஷரிஃபுக்கும் ஜூன் 11ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷயிட் அஃப்ரிடிக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையில் மொத்தமாக 2,632 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir