இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவிவரும் சூழ்நிலையில், எலிக் காய்ச்சலும் பரவி வருகின்றது. எலிக்காய்ச்சல் காரணமாக, கடந்த 25 ஆம் திகதி லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் இவ்வருடத்தில் 1,352 பேர் எலிக்காய்ச்சல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் 665 பேரும், பெப்ர்வரி மாதம் 453 பேரும், மார்ச் மாதம் 188 பேரும், ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி சுகாதார மாவட்டத்திலேயே அதிக எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.