யாழ் பல்கலையில் நாளை வில்லிசை அரங்கேற்றம்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் சி. செந்தூரனின் மாணவர் நித்தியானந்தன் மோகனதர்சனின் வில்லிசை அரங்கேற்றம் நாளை (21.05.2023 ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் சிறப்பு விருந்தினராக யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வி.எஸ்.பி. துசிதரனும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் சென் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் வணபிதா ந. ஜே. ஞானப்பொன்ராஜா ஆசியுரையையும் வடக்கு மாகாண கல்வித்திணைக்கள அழகியல் துறைக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.சிவசிவா மதிப்பீட்டுரையையும் வழங்குவர்.

அரங்கக் கலைஞர்களாக விற்குரு – நி.மோகனதர்சன், பக்கப்பாட்டு – பே. பிரசன்னா, விற்கடம் – மு. சுலக்சன், ஹார்மோனியம் – த.றொபேட், மிருதங்கம் – சி. செந்தூரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

விற்குரு மோகனதர்சன் தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார்.

இவ்வில்லிசை அரங்கேற்ற நிகழ்ச்சி கலாவினோதன் அமரர் சின்னமணிக்கு அர்ப்பணமாக மேற்கொள்ளப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply