விசுவமடு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –
விசுவமடு குளத்தை அண்டிய பகுதியில் சூட்சுமமான முறையில் மறைவிடம் ஒன்றில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகக் கிடைத்த தகவலை அறிந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது இரண்டு பீப்பாய்களில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது .
கிராம அலுவலர் முன்னிலையில் அனைத்து கசிப்பு பரல்களும் நிலத்தில் ஊற்றி அளிக்கப்பட்டன.
மேற்படி கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் மக்கள் வருவதை கண்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது 350 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு மற்றும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன மக்களால் அழிக்கப்பட்டுள்ளன.