உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் விளையாடும் இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, மதியபோசன இடைவேளைவரை 2 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேவிட் வோனர் 43 ஓட்டங்களோடும், உஸ்மான் க்வாஜா ஓட்டமெதனையும் பெறாமலும் ஆட்டமிழந்திருந்தனர். மார்னஸ் லபுசேன், ஸ்டீபன் ஸ்மித் இருவரும் தலா 2 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.
இந்திய அணியின் மொஹமட் சிராஜ், சர்துல் தாகூர் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
இந்த இறுதிப்போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களதும் விபரங்கள் –
அவுஸ்திரேலிய அணி – பட் கமின்ஸ் (அணித்தலைவர்), டேவிட் வோனர், உஸ்மான் க்வாஜா, மார்னஸ் லபுசேன், ஸ்டீபன் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கமரோன் க்ரீன், அலெக்ஸ் கரி, மிட்செல் ஸ்ட்ராக், நதன் லயொன், ஸ்கொட் போலன்ட்.
இந்திய அணி – ரோஹித் சர்மா (அணித்தலைவர்), சுப்மன் கில், புஜாரா, ரகானே, விராட் கோலி, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ், சர்துல் தாகூர், உமேஸ் யாதவ், மொஹமட் சமி.