ரூபாவின் பெறுமதி இன்றும் (9ஆம் திகதி) வீழ்ந்தது!

நேற்றுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. எனினும், கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வேகமாக வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 301.12 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 288.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 326.14 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 309.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனைப் பெறுமதி 379.16 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 360.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply