1227 நாளை தாண்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் நேற்று கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், “கூட்டமைப்பினர் பலமுறை எம்மை ஏமாற்றி விட்டார்கள் சென்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவருக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்து நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார் . அன்றிலிருந்து இன்றுவரை எமக்கு எந்த பயனும் எட்டப்படவில்லை.

இம்முறை மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்கும்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் கேட்டுள்ளார்கள்.

அத்தோடு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொண்றுள்ளார்கள் என கூறியுள்ளார் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir