இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்தை, சாதாரணமான விடயமாக அரசாங்கம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொலிஸாரை படுகொலை செய்தமை மற்றும் அரந்தலாவ படுகொலை ஆகியவற்றை ஒருபோதும் சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.
குறித்த சம்பவங்கள் நாட்டின் ஐக்கியத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாகும்.
மேலும் கருணாவின் கருத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு சாதாரண விடயமாக எடுத்துக்கொண்டார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.