யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் தொண்டர் சபையின் கல்வி நல உதவி

யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த யூன் 9ஆம் திகதியுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் நேற்றைய தினம் வைரவர் சாந்தி உற்சவத்தினை முன்னிட்டு ஆலய தொண்டர் சபையின் நிதிப் பங்களிப்பில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த
100 மாணவர்களுக்கு தலா 4000 ரூபா மதிப்புள்ள கற்றல் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கிவைப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஆலய குருக்கள்களான சிவதர்சக்குருக்கள், ஹரிதர்சக் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வவுச்சர்களை வழங்கிவைத்தனர்.

கடந்த வருடம் நாட்டில் நிலவிய பொருளாதார ஸ்திரமின்மையான காலப்பகுதியிலும் ஆலய தொண்டர் சபையினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply