மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன் கறுவா, இஞ்சி, கமுகு, வெனிலா போன்ற பல்வேறு வகையான ஏற்றுமதிப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வகையான அதிக இலாபம் தரக்கூடிய பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்கை பண்ணி வருகின்றனர்.
அவர்களுக்கான தொழிநுட்ப ஆலோசனைகளை வழங்கும் பொருட்டும், இப் பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை, அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்பம் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் செயற்பாடுகள் காலத்திற்குக் காலம் மட்டக்களப்பு ஏற்றுமதி விவசாய விரிவாக்கல் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த விசேட திட்டத்தின்கீழ் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளைபிரதேச செயலாளர் பிரிவின் மாரியம்மன் கோவில் வீதி, தாந்தாமலையில் செய்கை பண்ணப்பட்ட கறுவா பயிர் அறுவடைசெய்யும் விழா நேற்று (0 3) நடைபெற்றது இந் நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுஇந்த கறுவா அறுவடையினைஆரம்பித்து வைத்தார் .இந்தநிகழ்வின்போதுஉலக தரிசன நிறுவனத்தின் உதவியில் கறுவாபட்டைகளை கழற்றும் உபகரணங்களும் இலவசமாக அன்பளிப்பு செய்யப்பட்டன .