அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அதிக சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

உலகளாவிய சந்தையில் விலை வீழ்ச்சியடையும் போது, இலங்கையில் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை இன்று 1,500 ரூபாயாக உள்ளது, ஆனால் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 975 ரூபாயாக அதன்விலை இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 400 ரூபாயாக இருந்த ஒரு பக்கெட் பால் விலை 320 ரூபாயாக குறைக்கப்பட்டது, ஆனால் தற்போதைய அரசாங்கம் 5 ஆண்டுகளாக சீராக இருந்த விலையை மாற்றி 450 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

அத்தோடு 85 ரூபாயாக இருந்த சீனியின் விலை 140 ஆக உயர்த்தியுள்ளது அத்தோடு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதுவே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir