கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா பார்வையிட்டார். விபத்து இடம்பெற்றமை தொடர்பில் விசாரணை மெற்கொண்டிருந்த நீதிபதி, விபத்துக்கான காரணம் தொடர்பிலும் பொலிசாரிடம் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார். இதன் போது பூநகரி பொலிசார் விபத்து இடம்பெற்றமை தொடர்பான விளக்கத்தை தெரிவித்துள்ளனர்.
அப்பகுதயில் காணப்படும் போக்குவரத்து தடைகளும் விபத்துக்கள் இடம்பெறவதற்கான பெரும் வாய்ப்பாக அமைந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியில் காணப்படும் குன்றும் குழியுமான பகுதி அதிகளவில் காணப்படுகின்றமையால் அப்பகுதியில் விபத்துக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பூநகரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கு வீதியில் காணப்பட்ட குழியை கடந்து செல்ல முற்ப்ட்ட டிப்பர் வாகனத்துடனேயே மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் சம்பவ இடத்தினை இன்று பகல் நீதவான் பார்வையிட்டார். இதன்போது அப்பகுதயில் காணப்படும் வீதி போக்குவரத்து தடைகள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் நீதவான் நேரடியாக பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.