பொலிவியா சுகாதார அமைச்சர் ஈடி ரோகாவுக்கு (Eidy Roca) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில், கடந்த நான்கு நாட்களில் பாதிக்கப்படும் மூன்றாவது உறுப்பினர் இவராவார்.
அவர் நிலையான ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தனிமை, மருந்து மற்றும் கவனிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு நெறிமுறையுடன் கண்டிப்பாக இணங்குவதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பொலிவியர்களின் ஆரோக்கியத்திற்காக இந்த போரில் மீண்டும் சேர அமைச்சர் விரைவாக மீண்டு வரவேண்டுமென விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் பொலிவியாவில் சுமார் 38,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.