விக்டோரியா மாநிலம் அவுஸ்ரேலியாவில் இருந்து தனிமையானது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள அவுஸ்ரேலியா மாநிலமான விக்டோரியா, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து திறம்பட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நாளை இரவு தொடங்கி அண்டை மாநிலமான நியூ சவுத்வேல்ஸுடனான எல்லையை மூடுவதாக விக்டோரியன் அதிகாரிகள் இன்று அறிவித்தனர். இரு மாநிலங்களுக்கிடையில் சுமார் 50 எல்லைக் கடப்புகள் உள்ளன.

விக்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தனது 90 வயதில் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்ததால், மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது என்று மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். நாடு முழுவதும் 105 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்னில் உள்ள அதிகாரிகள், உள்ளூர் தொற்று பரவல் காரணமாக ஒன்பது கோபுரத் தொகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 3,000 பேரை முழு முடக்கநிலையின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படும் என்று ஆண்ட்ரூஸ் கூறினார்.

கோபுரத் தொகுதிகளில் இதுவரை மொத்தம் 398 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 53 தொற்றுகள் நேர்மறையானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டில் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா இடையேயான எல்லை மூடப்படுவது இதுவே முதல் முறை.

You May Also Like

About the Author: kalaikkathir