இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு – கல்வித்துறை

வயம்ப  பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சாத்தியமான பொருளாதார நெருக்கடி குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், நெருக்கடியின் இரண்டாம் கட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இதன்போது விளக்கினார்.

கொழும்பில் பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் பெரேரா, இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் குறைந்தது 39% ஐ இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியிருந்தாலும், 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், முதலீட்டுச் சபை  சம்பாதித்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள்  குறித்துப் பேசுகையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம, 2023 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான BOI நிர்ணயித்த இலக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும், அதில் முதல் காலாண்டில் 211 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடையப்பட்டன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu