கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செயவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செயலணியின் உறுப்பினர்களாக எல்லாவல மேதானந்த நாயக்க தேரர், பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க, காணி பணிப்பாளர் நாயகம் சந்திரா ஹேரத் உள்ளிட்ட 11 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த செயலணியில் சிறுபான்மையின மக்களின் சார்பில் பிரதிநிதிகள் உள்வாக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக கோரப்பட்ட போதிலும் அவ்வாறு சிறுபான்மையின பிரதிநிதிகளின் பெயர்கள் எவையும் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.