சிறகுகள் அமைய குரு – தளம் பிராந்தியத்தின் (குருநாகல் + புத்தளம்) ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு – “திசையறி” எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று குருநாகல் ரமுக்கந்தன அல் – ஹுதா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திசையறி செயற்றிட்டமானது பாடநூல் கல்வியைத் தாண்டிய, எதிர்கால இலக்குகளை இனங்காண்பதற்கான வழிகாட்டல் செயற்றிட்டமாகும். குறித்த செயற்றிட்டம் அமையத்தின் ஊடாக இணைய வழியில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் அமர்வில் தங்கள் நேரடியான வரவினை உறுதி செய்யவும்.
0766517505, 0784877361