
இலங்கையில் சட்டத்துக்குப் புறம்பான சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணை பிரிவு என்ற புதிய பொலிஸ் பிரிவை நிறுவ பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய பொலிஸ் பிரிவு தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன இன்று வெளியிட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.
இந்த புதிய பொலிஸ் பிரிவின் முக்கிய செயல்பாடுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வது, பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிலிருந்து சம்பாதித்த பணம் மற்றும் அவற்றால் கிடைத்த சொத்துக்களைப் பறிமுதல் செய்வதாகும்.
குற்றவியல் விசாரணைப் பிரிவின் (சிஐடி) பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த புதிய பொலிஸ் பிரிவு அமைக்கப்பட உள்ளது.