இஸ்ரேல் – ஹமாஸ் தொடரும் கடும் யுத்தம்| ஐ.நா. மனித உரிமை இயக்குநர் ராஜிநாமா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாள்களாக கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. இஸ்ரேலுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய ஹமாஸை அடியோடு அழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

அதற்காக, காஸா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 8,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் கிரேக், தனது ராஜிநாமாக் கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

அவரின் கடிதத்தில், காஸாவை முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply