கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர் குழுவினரை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானம் ஏற்றி வந்துள்ளது.
நேற்று மாலை 5.20 மணியளவில் குறித்த விமானம் இலங்கை மாணவர்கள் 125 பேருடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
125 மாணவர்களையும் அழைத்து வருவதற்காக UL 1188 எனும் விமானம் விசேட விமானம் நேற்று முற்பகல் 10.15 மணிக்கு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் கொல்கத்தா நோக்கிப் புறப்பட்டிருந்தது.
இதற்கு முன்னரும் நான்கு சந்தர்ப்பங்களில் இந்தியாவில் சிக்கியிருந்த உயர் கற்கைநெறி மாணவர்கள், இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.
அத்தோடு நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலும் சிக்கியிருந்த மாணவர்களை அழைத்துவர ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கொல்கத்தாவில் இருந்து இலங்கை திரும்பிய 125 மாணவர்களும் இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு விசேட பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.