ரி-20 உலகக்கிண்ணத்தொடர் இலங்கை அணி வெளியேறுமா?

ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டியைக் கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் இன்று நடைபெறவிருந்தது. நாணயச் சுழற்சிக்கு முன்னர் இருந்தே தொடர் மழை பெய்து வந்தது. நீண்ட நேரமாகக் காத்திருந்தும் மழை குறையாததன் காரணமாக, போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட அதனைக் கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் மூன்று போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இலங்கை அணி டி குழுவின் புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்திலேயே உள்ளது.

டி குழுவிலிருந்து தென்னாபிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் இலங்கை அணிக்கு ஒரு போட்டி மாத்திரம் மீதமிருக்கின்ற காரணத்தினால் சூப்பர் 8  சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

குழு டி  புள்ளிப் பட்டியல் வரிசையில் பங்களாதேஷ் 2 புள்ளிகளுடனும், நெதர்லாந்து 2 புள்ளிகளுடனும், நேபாள அணி ஒரு புள்ளியுடனும் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளுக்கும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply