9 ஆவது ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாள நாட்டு அணிகள் மோதியிருந்தன.
இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதையடுத்துக் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. ஷபாலி வர்மா 81, தயாளன் ஹேமலதா 47 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
179 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற, இந்திய அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.