இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி மலேசியா மகளிர் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் தமக்கான இரண்டாம் சுற்று வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துள்ளது.
இதேவேளை, இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இலங்கை அணி தாய்லாந்து அணியை வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு இலங்கைக்கு உறுதியாகும்.
மலேசியா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.