தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள வாகனச் சாரதிகளுக்கு, இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில், சாரதி அனுமதி அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாததிருந்த  இதனால்  800,000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தேவையான சாரதி அனுமதி அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய சாரதி உரிமம் மற்றும் புதுப்பித்தல்களுக்காக சாரதி உரிமங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply