நடைமுறைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரெனில் அரசமைப்புக்கமைய அவரால் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்