எதிர்வரும் தேர்தல் காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் அந்தந்த மாகாணங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்பு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பாதுகாப்பு ஏற்பாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் அதிகபட்ச பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.