கலால் விதிகளுக்கு முரணான வகையில் மதுபான உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கலால் விதிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரத்தை சவாலுக்கு உட்படுத்தி மதுபானக் கடை உரிமையாளர்கள் குழு தாக்கல் செய்த 04 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கு இன்று (06) அனுமதி வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள நிதி அமைச்சர் மற்றும் கலால் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும் நான்கு வாரங்களுக்குள் எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர், சம்பந்தப்பட்ட மனுக்கள் எதிர்வரும் பெப்ரவரி 06, 2025 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிடப்பட்டது.