ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை (தடுப்பூசி) கண்டறியும் ஆராய்ச்சியில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி சோதனையில் பல நாடுகள் மனித சோதனையில் உள்ளன. இதற்காக ஆரோக்யமாக இருக்கும் தன்னார்வலர்கள் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுகின்றனர். அபுதாபியில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி சோதனை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அனைத்து நபர்களும் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளில், பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு மற்றும் சோதனை செய்வதற்கான முதல் மையமாக ஷார்ஜாவின் அல் கொரோயன் சுகாதார மையம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதாக அமைச்சகம் இன்று தெரிவித்தது. கடந்த மாதம் தொடங்கிய மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகளுக்கு முன்னணியில் உள்ள அபுதாபி சுகாதாரத் துறை, அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (சேஹா) மற்றும் ஜி 42 ஹெல்த்கேர் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.