நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம்

இந்த வருடத்தின் வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எனவே, தனிநபர் வருமான வரி எல்லையை ரூபா.500,000 லிருந்து ரூபா.720,000 ஆக மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைக்கு திருத்தங்களை சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த வரி மட்டத்தினைக் கொண்டோருக்கு அதிக நிவாரணம் வழங்குதல், நடுத்தர வரி மட்டத்தினருக்கும் இதே போன்ற நிவாரணம் அளித்தல் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு சற்றுக் குறைவான நிவாரணம் வழங்குதல் அத்துடன் இந்தத் திட்டத்தின் நோக்கத்தை மாற்றாதிருத்தல் என்பன இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply