வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஜெர்மனியில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி உறுதியளித்து பல நபர்களிடமிருந்து 2.4 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபர், மாவட்ட நீதிபதியாகவும் சட்டத்தரணியாகவும் நடித்து பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் ஜேர்மனியில் வேலைவாய்ப்பைப் பற்றிய பொய்யான வாக்குறுதிகள் மூலம் 2,400,000 கோடிக்கு மேல் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
மேலும், நிதி மோசடி தொடர்பாக கெசல்வத்தை பொலிஸில் மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.