மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது – நாமல் ராஜபக்ஷ மீண்டும் திட்டவட்டம்

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுpன பெரமுவின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

எங்களுடைய நாடு ஒற்றையாட்சி நாடாகும். நாட்டிலுள்ள தாய் தந்தையரும் குழந்தைகளும் இந்த ஒருமித்த நாட்டை பாதுகாப்பதற்கே போராடினர். இந்த பௌத்த நாட்டுக்குள் அனைத்து மதத்துக்கு கௌரவத்தை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதனை தற்போது செய்கின்றோம்.

அதேபோன்று, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்க முடியாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தாய் தந்தை மற்றும் இளையோரை தேர்தரல் காலத்தில் மாத்திரம் ஏமாற்றுவதற்கு விரும்பவில்லை. ஏமாற்றுவதால் எவ்வித பயனுமில்லை.
எங்களுக்கு முடியும் என்பதை முடியும் என்றும் முடியாது என்பதை முடியாது எனவும் கூறிவிட வேண்டும். நாங்கள் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்போம். மொழி உரிமையையும் பாதுகாப்போம்.

ஆனால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்க முடியாது என்பதுடன், வடக்கு கிழக்கையும் நாங்கள் ஒருபோதும் இணைக்க மாட்டோம் என்பதையும் தெளிவாக அறிவிக்கின்றோம்” என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply