உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் வெற்றி என பாராட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசப்பிரிய, தேர்தலை தாமதப்படுத்துவது தவறு என்றும், இந்த உண்மையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது நீதியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும், “தேர்தலை ஒத்திவைப்பது அல்லது நடத்தத் தவறுவது மக்களின் உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த முடிவு ஆச்சரியப்படுவதற்கில்லை. தாமதமானாலும், இறுதியாக நீதி வழங்கப்படுவதாகவே நான் இதைப் பார்க்கிறேன். அதன்படி, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.