பள்ளிமுனை கடற்கரையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மன்னாரிற்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது பள்ளிமுனை கடற்கரை இறங்குதுறைக்குச் சென்று அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை ஆழப்படுத்தும் பணிகளை அமைச்சர் நேரடியாக பார்வையிட்டார்.

கடல் வற்று நேரங்களில் தமது இறங்குதுறை பகுதியில் படகுகளை உட்கொண்டு வருவதில் ஏற்படும் சிரமங்களை போக்க சுமார் 700 மீட்டர் தூரத்தை ஆளப்படுத்தி தூர்வாரி தருமாறு  மன்னார் பள்ளிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட உடன் நடவடிக்கையின் பிரகாரம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் தூர்வாரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் நிலைமைகளை அவதானித்ததுடன்  குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆழப்படுத்தும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

இந்த நிலையில் கிராமிய கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply