மழை காலங்களில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply