8 இந்திய மீனவர்களுக்கு செப்டெம்பர் 5 வரை விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இலங்கைக் கடற்பரப்பினுள் நேற்று இரவு சட்டவிரோதமாக ஒரு விசைப் படகில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் மேற்படி 8 மீனவர்களையும் கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர், அந்த மீனவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளைத் தொடர்ந்து இன்று பகல் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதிவான் மேற்படி 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply