கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று கூறுவது தவறானது என நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
2022 ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தற்காலிக கடன் தடையானது வெளிநாட்டு வணிக கடன்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இருதரப்பு கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அத்துடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை வழங்காமையே முதன்மையான காரணம் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் கடன் சேவை தொடங்கும் போது பொருளாதார ஸ்திரமின்மை மீண்டும் ஏற்படும் என சமூகத்தில் கருத்து நிலவுவதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் உண்மையான காரணிகள் தீர்க்கமானவை, மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களை சிறுமைப்படுத்த மற்றும் இத்தகைய உண்மைகள் குறைத்து மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிவதென்பது மிகவும் துரதிஷ்டவசமான சூழ்நிலையாகும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.