வாக்குகளை எண்ணுவதில் முறைகேடு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் சட்டத்துக்கு முரணாக சில நடவடிக்ககைள் நடைபெற்றுள்ளதாகவும், அத்தோடு வாக்கு எண்ணும் பணிகளின் போது சில அதிகாரிகள் முறைகேடாக நடந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

50 சதவீத வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால், விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் முதலிரு இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் அல்லது கட்சிகளின் அங்கத்துவத்தர்களிடம் இது தொடர்பில் அறிவித்து, அவர்களது அனுமதியோடு ஆரம்பிக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவும், அதற்கு முன்னதாக விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும், அதனைத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றே தாம் அறிந்து கொண்டதாகவும், இது பிழை எனவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அதனைத் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பிழையான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இல்லாமல் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, இரண்டாவது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் போது தமது கட்சியின் பிரதிநிதிகள் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் திலங்க சுமதிபால, சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply