லெபனானை தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாஹ், இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மைக்காலமாக ஷெல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதால் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனானில் போராளிக் குழுவைக் குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டதுடன் 1,600 பேர் காயமுற்றனர்.
எவ்வாறாயினும், இஸ்ரேலின் இரும்பு தங்குமிட அமைப்பின் இந்த ஷெல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் இடைமறிப்புகளிலிருந்து வரும் குப்பைகள் வறண்ட காடுகளில் தீயை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், அவ்வப்போது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு வலயங்களில் பணிபுரியும் இலங்கையர்கள் அத்தகைய தாக்குதல்களுக்கு சமிக்ஞை செய்யும் எச்சரிக்கைகள் இயக்கப்படும் போதெல்லாம் அவர்களின் பாதுகாப்பிற்காக அருகிலுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.