யாழ்ப்பாணத்தில் கடந்த 34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று வெள்ளிக்கிழமை முதல் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி வரையிலும், அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலுமான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டன.