புத்தளம் – கற்பிட்டி – முசல்பிட்டி பகுதியில் 44,2680 ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முசல்பிட்டி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 போதைப்பொருள் பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகள் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.