ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்!

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள எம்.டி.அன்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த பேராசிரியர் உடுகமசூரிய இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்தக சனத் குமாநாயக்கவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டதாரியாவார்.

பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும், டெக்சாஸ் தென்மேற்கு மருத்துவ மையத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பல காப்புரிமைகளைப் பெற்றுள்ள இவர், அமெரிக்க அரச பணியில் இருந்து விலகி, கௌரவ சேவையாக ஜனாதிபதியின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply