வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கடற்படை குழுவினரும் முன்வந்துள்ளனர்!

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

 

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடொன்றின் கூரை மீதேறி உதவி கோரிய ஒருவர் விமானப்படை ஹெலிகொப்டரின் உதவியுடன் இன்று(27) பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பலத்த மழை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மன்னார் மாவட்ட மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 49,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply