மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வில் கௌரி ராஜனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற WIM Global விருது வழங்கும் நிகழ்வின் போது செல்வி கௌரி ராஜன்  Global Trailblazer விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற Women Top 50 Professional & Career Woman Awards 2024 இன் போது WIM Global இனால் பிரபல முன்னோடி பெண் தொழில்முயற்சியாளரான செல்வி கௌரி ராஜனுக்கு GlobalTrailBlazer விருது வழங்கப்பட்டது.

வியாபாரம் மற்றும் சமுதாய அபிவித்திக்கான அவரின் விசேட பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

மலேசியாவின் Women in Management (WIM) அமைப்பின் தவிசாளரான பேராசிரியர் கலாநிதி செல்வராஜ் ஓவியன்பிள்ளை இங்கு கருத்து வெளியிடுகையில், ‘கௌரி
ராஜன், கடினமான காலங்களில் தளராது தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மற்றும் மனித நேயம்மிக்க பலம்வாயந்த ஒருவராவார்.

GlobalTrailBlazerTop50 விருதினைஅடுத்து அவரின் குறிப்பிடத்தக்களவான பங்களிப்பு மற்றும் தூரநோக்குடைய கருத்துக்கள், பரந்தளவிலான பூகோள வலையமைப்பு எண்ணக்கருக்கள் அவரின் கைத்தொழிலின் எதிர்காலத்தை ஒழுங்குபடுத்தும் என்பதுடன் உண்மையில்அற்புதமானஒருபெண்” என்று குறிப்பிட்டார்.

மேலும் WIM ஸ்தாபகரான திருமதி சுலொசனா சிகேரா கருத்து வெளியிடுகையில், இந்த விருதின் மூலம் வியாபாரம் மற்றும் சமுதாய அபிவிருத்திக்கான அவரின் பங்களிப்பு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுவதுடன், “தமக்கு முன் சேவை” என்ற எண்ணக்கருவின் வெளிப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை மலேசியாவில் நடைபெற்ற பூகோள தலைமைத்துவ மாநாட்டில் செல்வி கௌரி ராஜன் பிரதான உரையாற்றினார். இதன் போது அவர் “சமூக தலையீட்டுக்கு மாற்றம்மிக்க தலைமைத்துவம்” தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

சம்பிரதாயபூர்வமான ஆண் ஆதிக்கம் மிக்க கைத்தொழில்துறையொன்றில் வெற்றிகரமான ஒரு பெண் என்ற வகையில் தமது தனிப்பட்ட பயணத்திலிருந்து உதாரணஙக்ளைக் குறிப்பிட்ட கௌரி, மாற்றம்மிக்க தலைமைத்துவமானது வியாபாரத்திற்கும் அப்பால் செல்லும் முறை மற்றும் மக்களை பலப்படுத்தல், ஆற்றல்களை வெளிக்கொண்டுவருதல் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை வழிப்படுத்தும் முறையை பகிர்ந்துகொண்டார்.

Sun Match நிறுவனத்தின் பணிப்பாளர் என்ற வகையில், அவர் தமது குடும்ப வியாபாரத்தை நம்பகத்தன்மை மிக்க வீட்டு வர்த்தக குறியீடாக தமதுவகிபாகத்தை உறுதி செய்து கொண்டு மாற்றமடைகின்ற தொழில் முயற்சியொன்றாக மாற்றியமைக்கும் தீர்க்கமான செயற்பணியை நிறைவேற்றினார்.

சர்வதேச ரொட்டரி அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முதலாவது பெண் மாவட்ட ஆளுநர் என்ற வகையில் செல்வி கௌரி ராஜன் வரலாற்றில் இடம்பிடித்துளள்மை ரொட்டரி ஆண் ஆதிக்கம் கொண்ட துறையில் எதிர்கால பெண் தலைமைகளுக்கு வழிகோளும் வகையில் பலம்வாயந்த முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.

இவர் இலங்கையின் ரொட்டரி ஆளுநராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் ஒரு மாற்றம்மிக்க தொழில்முயற்சியின் முன்னெடுப்பாக இருந்தது இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பிள்ளைகள் 2500 – 3000 பேர் பல்வேறு இருதயநோயக்ளினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், அவாக்ளில் பெரும்பாலானோர் அவர்களின் முதலாவது பிறப்பைக் கொண்டாடுவதற்குக்கூட உயிர் வாழ்வதில்லை என்று அறிந்துகொண்ட போதாகும்.

ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டு பல்வேறு அன்பளிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் இலங்கையின் முதலாவது இருதய வால்வு வங்கியை தாபிக்க அவர் முன்னின்று செயற்பட்டார். குறிப்பாக இந்தக் கருத்திட்டத்தின் ஊடாக இதுவரை சுமார் 1500 பிள்ளைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள போதிலும் இன்னும்பல வேலைகள் எஞ்சியுள்ளன.

“ஒவ்வொரு பிள்ளையையும் காப்பற்றும்வரை நாம் ஓயமாட்டோம். இது எமது அர்ப்பணிப்பாகும்” என்று செல்வி கௌரி குறிப்பிட்டார்.

கலாநிதி சுலொசனா சிகேரா ஆரம்பித்துவைத்த Women in Management (WIM) Global இனால் இலங்கையிலும், மாலைதீவு, மலேசியா, கனடா, ஐக்கிய அறபு இராச்சியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆபிரிக்கா வரை வியாபித்து பல்வேறு துறைகளிலும் பெண்கள் வலுவூட்டப்பட்டுள்ளதை கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Top 50 Professional & Career Women Global Awards போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னேற்றத்திற்காக அர்பப்ணிப்புட செயற்படுகின்ற பெண் தலைமைத்துவத்தின் பலம்வாய்ந்த வலையமைப்பை உருவாக்கி 26 நாடுகளிலிருந்து  பெண்கள் 1100 இற்கும்  மேற்பட்டோ   பல ராட்டப்பட்டுள்ளார்கள்.

Global Trailblazer விருதை அடுத்து செல்வி கௌரி ராஜனின் அங்கீகாரம் மாற்றம்மிக்க சக்தி என்ற வகையில் அவரின் மரபுரிமையை உறுதி செய்கின்றது. அவரின் தலைமைத்துவம் நீண்டகாலம் நிலைத்திருக்கும் சமூக தாக்கத்துடன் தொழில் முயற்சியின் வெற்றியுடன் ஒன்றிணைப்பதை மீண்டும் வரைவிலக்கணம் செய்வதுடன், வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் போது தனியொரு தலைவர் மேற்கொள்ளத்தக்க அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றது.

செல்வி கௌரி ராஜனின் பயணம் நோக்கங்களை கொண்ட தலைமைத்துவத்தின் பலத்தை வலியுறுத்துகின்றது. எதிர்கால சந்ததியினருக்குமான உறுதி,கருணை,பாசம் மற்றும் நோக்குடன் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு ஊக்கமளிக்க ஒருபோதும் அழியாத அடையாளத்தை பதிவு செய்கின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply