கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள பெண்ணொருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட LTTE அமைப்பின் கொடியுடன் கூடிய புகைப்படங்களை குறித்த சந்தேகநபர் பதிவிறக்கம் செய்து அதனை சமூக ஊடகங்களில் மீள்பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

இதனூடாக, பொது அமைதிக்கும், இனங்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply