ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் பாதிகாப்பாக மீட்கப்பட்டனர்!

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 10 பேர் கொண்ட குழு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

16 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் ஈடுபட்டு பின்னர் பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஒரு மாணவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், கடும் பனிமூட்டம் காரணமாகவும், குழு திரும்பும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டதையடுத்து, 111வது படைப்பிரிவின் தலைமையகம் மற்றும் 2வது இலங்கை சிங்கப் படைப்பிரிவின் (SLSR) துருப்புக்கள் இணைந்து குழுவை பாதுகாப்பாக மீட்பதற்காக கூட்டு மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தன.

காலை 8.00 மணியளவில் மீட்பு பணி தொடங்கியதுடன் படையினர் அதிகாலையில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply