கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுக்கு முன்பாக போக்குவரத்துக்கு தடை விதிக்கும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸார் கலைக்க முற்பட்ட போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயங்களுக்கு உள்ளானதையடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.