இடைத்தரகராக செயற்பட்டு இலஞ்சம் பெற்ற பெண் கைது!

மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்த, கோனஹென பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் பாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிமெடியவத்த காணியை முறைப்பாட்டாளருக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாக மேற்கொள்வதற்காக, குறித்த பெண் இடைத்தரகராக செயற்பட்டு மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply