இலஞ்சம் பெற்ற எழுத்தாளருக்கு விளக்கமறியல்!

கடவுச்சீட்டு வழங்குவதற்காக நபரொருவரிடம் 6,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தாளர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply