கந்தானை பகுதியில் வீடொன்றின்மீது துப்பாக்கிச்சூடு!

கந்தானை வீதி மாவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கந்தானே கொன்ட ரஞ்சி என அழைக்கப்படும்  ரஞ்சித் குமார என்பவரின் வீட்டை குறிவைத்து இந்த ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் துபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் கடத்தல் மற்றும் மாடு திருடுதல் ஆகிய குற்றங்களுக்காக சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபராவார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply